ஸ்பெக்ட்ரம் விவகாரம்-ராஜாவைக் கைது செய்யக் கோரி கொட்டும் மழையில் பேரணி
ராமநாதபுரம்: ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவைக் கைது செய்ய வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் அதிமுக இளைஞர் பாசறை - இளம்பெண்கள் பாசறை சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உழல் செய்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவைக் கைது செய்ய இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றது.
மேலும், இந்த விவகாரத்தில் தி.முக.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் முறைகேடான நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏல ஒதுக்கீடு குறித்த, பிரதமர் மன்மோகன்சிங்கின் அறிவுரைகளை அலட்சியம் செய்ததுடன், அவரை அவமதிக்கும் விதத்தில் ராசா செயல்பட்டதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஸ்பெக்டரம் ஊழலில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர்.ஆ.ராசாவைக் கைது செய்ய வலியுறுத்தி, அதிமுக இளைஞர் பாசறை - இளம்பெண்கள் பாசறை சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் தொடங்கிய இந்தப் பேரணி பரமக்குடியில் நிறைவடைந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், திரளானோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
மழை-ராமேஸ்வரத்தில் குறை கேட்ட அதிமுக:
இதற்கிடையே, கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரத்திற்கு இன்று சென்ற அதிமுக குழு அங்கு மக்களை சந்தித்து குறை கேட்டறிந்தது.
முன்னாள் அமைச்சரும், கட்சியின் சிறுபான்மையினர்நலப் பிரிவு செயலாளருமன அன்வர் ராஜா தலைமையில் சென்ற இக்குழுவினர் மழையால் பாதிக்கப்பட்ட காந்தி நகர், அண்ணா நகர், பள்ளிவாசல் தெரு, மாந்தோப்பு, நடராஜபுரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது.
மேலும் மழையால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தஞ்சமடைந்துள்ள 700 பேருக்கு அதிமுக சார்பில் மதிய உணவும் அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்வர் ராஜா பேசுகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நிவாரண நடவடிக்கையும் இதுவரை அரசால் செய்யப்படவில்லை என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications