சென்னையில் ஜெகன் மோகன் ரெட்டி-கை வலிக்கு சிகிச்சை பெற வந்ததாக தகவல்
சென்னை: ஆந்திர காங்கிரஸை ஒரு வழியாக்கி விட்டு ஓய்ந்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி திடீரென சென்னை வந்துள்ளார். அவரது பயணத்திற்கான நோக்கம் தெரியவில்லை. ஆனால் கையில் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை பெற அவர் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் மேலிடத்தையும் பாடாய்ப்படுத்தி வந்த ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் தனது எம்.பி. பதவியை உதறினார். காங்கிரஸிலிருந்தும் விலகினார். அவரது தாயார் விஜயலட்சுமியும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இன்று காலை ஜெகன் மோகன் ரெட்டி தனது தாயார், மனைவி ஆகியோருடன் திடீரென சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர்களை சந்தித்த செய்தியாளர்களிடம், இது தனிப்பட்ட பயணம் என்று மட்டும் கூறி விட்டு வேகமாக கிளம்பிச் சென்றார்.
பின்னர் அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ஜெகன் மோகன் ரெட்டி கிளம்பிப் போனார்.
ரெட்டியின் வருகைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் அவருக்கு கையில் வலி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெற வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications