மோசமான வானிலை: அந்தமான் சென்ற விமானங்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பின!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்குப் பருவமழை அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது தென்னகத்தில், குறிப்பாக தமிழகம் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில்.

சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 5.30 மணிக்கு அந்தமானுக்கு கிங்பிஷர் விமானம் 117 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் அந்தமானை நெருங்கிய போது அங்கு மோசமான வானிலை நிலவியதால் தரையிறங்க முடியவில்லை. இதனால் சென்னைக்கு திரும்பி வந்து விட்டது.

இந்த விமானம் மீண்டும் இன்று அந்தமான் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட, கடுப்பான பயணிகள் கோஷமிட்டனர்.

இதேபோல சென்னையில் இருந்து அதிகாலை 5.50 மணிக்கு அந்தமான் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 147 பயணிகள் புறப்பட்டு சென்றனர். மோசமான வானிலையால் விமானமும் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் தரையிறங்காமல் காலை 7.50 மணிக்கு மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தது.

பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறங்காமல் விமானத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இந்த விமானம் மீண்டும் காலை 9 மணிக்கு அந்தமான் புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலையில் புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதத்துடன் கிளம்பின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+