சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி போதை பொருள் பறிமுதல், 6 பேர் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்றிரவு சுமார் ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்பறிமுதல் செய்யப்பட்டது. இதை மலேசியாவுக்கு கடத்த முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்றிரவு 12.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றது. 11.30 மணி அளவில் அந்த விமானத்தில் செல்லும் சில பயணிகள் போதைப் பொருள் கடத்துவதாக மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு மர்ம போன் வந்தது.
இதையடுத்து மலேசியா செல்லும் பயணிகளையும், அவர்கள் உடைமைளையும் போதை பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். இதில் சிறு சிறு பொட்டலங்களில் போதைப் பொருள் வைத்திருந்த ராமகிருஷ்ணன் (46), மகேந்திரன் (29), மாரி முத்து (33), குணசேகரன் (33), கண்ணையா (46) எத்திராஜ் (37) ஆகிய 6 பயணிகள் சிக்கினார்கள். அவர்கள் தங்கள் கைப்பைகளில் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்தனர்.
அவர்கள் வைத்திருந்தது அப்ட்ரின் என்னும் வகையைச் சேர்ந்த போதைப் பொருளாகும். அவர்களிடம் இருந்து ரூ. 4 கோடி மதிப்புள்ள 27 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப் பொருள் கடத்தும் கும்பல் இந்த 6 பயணிகளையும் தங்கள் வேலைக்கு பயன்படுத்தியதாகத் தெரிகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications