இடைவிடாமல் 2 நாளாக பெய்து வரும் மழை-வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை
சென்னை: சென்னை நகரி்ல் நேற்று தொடங்கி தொடர்ந்து நிற்காமல் பெய்து வரும் கன மழையால் சென்னை நகரம் வெள்ள நீரில் தத்தளிக்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிப் போயுள்ளனர். வாகனப் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் இந்த வட கிழக்குப் பருவ மழை சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்றுதான் பலத்த மழை கொட்டத் தொடங்கியது. நேற்று முற்பகல் வாக்கில் தொடங்கிய இந்த பலத்தமழை இந்த நிமிடம் வரை நிற்காமல் தொடர்ந்து பெய்துவருகிறது. சில பகுதிகளில் மிதமான மழையாகவும், பல பகுதிகளில் சற்று கன மழையாகவும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரிலும், புறநகர்களிலும் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. வடபழனி, திருவான்மியூர், மந்தைவெளி, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட நகர்ப் பகுதிகளிலும், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, அம்பத்தூர், முகப்பேர், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.
மழையுடன் காற்றும் வீசுவதால் கடும் குளிரும் காணப்படுகிறது. குறிப்பாக நேற்று இரவு மிகக் கடுமையான குளிர் காற்று வீசியதாலும், நிற்காமல் பெய்த மழையாலும் மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர். குறிப்பாக மாடி வீடுகளில் தங்கியுள்ளோர் சொல்லொணா துயரமடைந்தனர். குழந்தைகள் பெரும் அவஸ்தைக்குள்ளாகினர்.
தலைநகரின் அனைத்துப் பகுதிகளும், புறநகர்ப் பகுதிகளும் முற்றிலுமாக முடங்கி, ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதைப் போல காணப்படுகிறது. வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பாய்ந்து கொண்டிருப்பதால் வாகனங்களை ஓட்டிச் செல்வோர் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
திருவொற்றியூர், எண்ணூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications