For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் ரூ. 194 கோடி சேதம்: அதிகாரிகள் மதிப்பீடு

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 14 மிமீ மழை பதிவாகியுள்ளது. மழைக்கு மாவட்டத்தில் இதுவரை 497 வீடுகள் இடிந்துள்ளன. மழையால் ரூ. 194 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் வடபகுதியான ஓட்டப்பிடாரம், மணியாச்சி, எட்டையபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால் குளங்கள் நிரம்பின. சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஏராளமான வீடுகளில் மழை நீர் புகுந்தது. திருச்செந்தூரில் அதிகபட்சமாக 149 மி்மீ மழை பதிவாகியுள்ளது.

275 விசைபடகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. வேம்பார் முதல் பெரியதாழை வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து கலெக்டர் மகேஸ்வரன் உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கண்காணி்ப்பு அலுவலர் சுர்ஜித் சவுத்ரி தலைமையிலான அதிகாரிகள் குழு பார்வையிட்டு ரூ.194 கோடிக்கு மழையால் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளனர்.

English summary
Tuticorin has heavy rain because of the depression in Bay of Bengal. As of now 497 houses are damaged. The losses incurred by rain in the district is estimated at Rs. 194 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X