எல்டிடிஇ மீதான தடையை நீடித்ததை எதிர்த்து வைகோ வழக்கு
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீடிப்பு செல்லும் என்று டிரிப்யூனல் அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், :
கடந்தமே 14-ந்தேதி விடு தலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறி விப்பாணை ஒன்றை வெளியிட்டது. இதுபற்றி விசாரித்த தீர்ப்பாயம் புலிகள் மீதான தடை நீட்டிப்பை உறுதி செய்தது. மேலும் அதை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து கடந்த நவம்பர் 12-ந்தேதி தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பானது இயற்கை நீதிக்கு முரணானது.
மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டின் பகுதியையும் சேர்த்து தனி நாடு வேண்டி போராடுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி உள்ளது.
அமெரிக்கா விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்திருந்தாலும் அந்நாட்டில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
போரில் சிதறடிக்கப்பட்ட புலிகள் உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் ஒன்று கூடி மீண்டும் போராடுவார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் கூறி இருப்பது தவறு. ஈழ போராட்டம் தொடர்பாக செய்திகள் வெளியாகும் இணைய தளங்கள் யாவும் புலிகள் இயக்கத்திற்கு சொந்தமானதல்ல.
இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பாயம் விடு தலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை உறுதி செய்வது அதனை சட்ட விரோத அமைப்பு என அறிவித்தது தவறு. எனவே தீர்ப்பாயத்தின் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இம்மனு வருகிற திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications