For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாயத்து ஊழியர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி விகேபுதூர் தாலுகா அலுவலகம் முற்றுகை

Google Oneindia Tamil News

சுரண்டை: பஞ்சாயத்து ஊழியர் தற்கொலை செய்யக் காரணமாக இருந்த பஞ்சாயத்து தலைவரையும், ஊராட்சி உதவியாளரையும் கைது செய்யக் கோரி பொதுமக்கள் வி.கே.புதூர் தாலுகா அலுலகத்தை முற்றுகையிட்டனர்.

சுரண்டை அருகே உள்ள ராஜகோபாலபேரி ஊராட்சியில் மக்கள் நலப்பணியாளராக பணியாற்றியவர் அருமைராஜ். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் மோசடி செய்ய இவரை பஞ்சாயத்து தலைவர் ஜான், ஊராட்சி உதவியாளர் நவநீதிகிருஷ்ணன் ஆகியோர் வற்புறுத்தினர். இதற்கு அருமைராஜ் மறுக்கவே அவர் தாக்கப்பட்டார்.

இதனால் அவமானம் அடைந்த அருமைராஜ், தனது சாவுக்கு பஞ்சாயத்து தலைவர் ஜான், ஊராட்சி உதவியாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அருமைராஜ் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்க்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வி.கே.புதூர் தாலுகா அலுலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

English summary
Rajagopalaperi panchayat worker named Arumai Raj committed suicide. In his suicide note he had stated that the panchayat president and his assistant compelled him to be a part of a scandal for which he refused. He commmitted suicide because of the corrupted duo which he clearly mentioned in that note. Villagers sieged the V.K. Pudur Taluk office insisting the arrest of that 2 persons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X