ராகுல் காந்தி திடீர் மலேசியா பயணம்: ரப்பர் தோட்டங்களை பார்வையிட்டார்
டெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி எந்த வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி நேற்று திடீரென மலேசியா புறப்பட்டுச் சென்றார்.
வழக்கமாக ராகுல் காந்தி எங்கு செல்வதாக இருந்தாலும் பாதுகாப்பு பரிவாரங்களுடன் தான் செல்வார். அவ்வப்போது பாதுகாப்பு பணியில் இருப்பவர்களுக்கு கூடத் தெரியாமல் குடிசைகளுக்கு திடீர் விஜயம் செய்வார். தற்போது எந்த வித பாதுகாப்பும் இன்றி அவர் மலேசியா சென்றுள்ளார்.
ராகுல் சொந்த விஷயமாக மலேசியா சென்றிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் வீட்டிற்கு சென்ற அவருக்கு தடபுடலாக விருந்து அளிக்கப்பட்டது. பின்னர் மலேசியா இந்திய காங்கிரஸ் இளைஞரணி தலைவர் டி.மோகன் ராகுலை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு அவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி காரில் தனியாக புறப்பட்டார்.
மலேசியா என்றால் நம் நினைவிற்கு வருவது ரப்பர் தோட்டஙகள். அங்குள்ள பல்வேறு ரப்பர் தோட்டங்களை ராகுல் பார்வையிட்டார். அவர் ரப்பர் தோட்டம் வாங்கச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
ரகசியமாக ரப்பர் தோட்டம் வாங்கவே பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அவர் ரப்பர் தோட்டங்களை பார்வையிட்டதை மலேசிய போலீசார் ரகசியமாக வைத்திருந்தனர்.
இதற்கிடையே ராகுலின் இந்த திடீர் பயணம் குறித்து மத்திய அரசுக்கு தெரியுமா? என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மேல் சபை எம்.பி. டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுலின் இந்த ரகசிய விசிட் குறித்து சோனியாவோ, மத்திய அரசோ வாய் திறக்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications