காங்கிரஸாரைத் தாக்கிய கலெக்டர்-கலெக்டரை உதைத்த காங்கிரஸார்-திருவண்ணாமலையில் பதட்டம்
திருவண்ணாமலை: கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கான அடையாள அட்டை விநியோக நிகழ்ச்சியின்போது காங்கிரஸாருக்கும், கலெக்டர் ராஜேந்திரனுக்கும் இடையே மோதல் மூண்டது. அப்போது காங்கிரஸார் சிலரை கலெக்டர் தாக்கியதாக கூறி அவரை காங்கிரஸ் கட்சியினர் அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் அடையாள அட்டை வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொள்ள அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யும், டாக்டர் ராமதாஸின் சம்பந்தியுமான கிருஷ்ணசாமி, திமுக எம்.எல்.ஏ. சிவானந்தம், மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பெருமளவில் காங்கிரஸார் குவிந்திருந்தனர். இதையடுத்து அவர்களை கீழே இறங்கிச் செல்லுமாறு கலெக்டர் கூறியுள்ளார். இதையடுத்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது சில முக்கிய பிரமுகர்களை கலெக்டர் தாக்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கலெக்டர் மீது பாய்ந்த காங்கிரஸார், அவரை சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், எம்.பி. கிருஷ்ணசாமி சாலை மறியல் போராட்டத்தில் குதித்தார். அவரை அணுகிய திமுகவினர், சமாதானப்படுத்தி கெஸ்ட் ஹவுஸ் ஒன்றுக்குக் கூட்டிச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications