மானாமதுரை அருகே சு.சாமி சிறப்பு யாகம்: கும்பகோணம் கணபதி சாஸ்திரி நடத்தினார்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேதியரேந்தல் விலக்கு, பஞ்சபூதேஸ்வரம் என்ற இடத்தில் பஞ்சமுக ப்ரத்தியங்கரா தேவி கோவில் சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டார் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேதியரேந்தல் விலக்கு, பஞ்சபூதேஸ்வரம் என்ற இடத்தில் பஞ்சமுக ப்ரத்தியங்கரா தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பகோணம் அய்யாவாடி ப்ரத்தியங்கரா தேவி கோவிலைப் போன்று சக்தி வாய்ந்தது.
கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலில் சதசண்டியாகம், நிகும்பலா யாகம், புத்திர காமேஷ்டி யாகம், கஜபூஜை போன்ற பல முக்கிய யாகங்கள் நடைபெறும். ஒவ்வொரு மாத அமாவாசை அன்றும் மிளகாய், மிளகு ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு யாகம் நடத்தப்படும்.
மேலும், இந்த கோவிலுக்கு தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, பொதுச்செயலாளர் சந்திரலேகா ஆகியோர் காலை 7 மணி அளவில் இசட்பிளஸ் பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ ப்ரத்தியங்கரா தேவி கோவிலுக்கு சென்றனர். அவர்களை கோவில் காப்பாளர் ஞானசேகர சுவாமிகள் வரவேற்றார்.
இந்த சிறப்பு யாகத்தை கோவில் அருகே உள்ள யாகசாலை மண்டபத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரி நடத்தினார். இந்த யாகம் மற்றும் சிறப்பு பூஜையில் சுப்பிரமணிய சுவாமி மதியம் 12 மணி வரை கலந்து கொண்டார்.
கடந்த 1991-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெற்றி பெற சிறப்பு யாகங்கள் செய்த கும்பகோணத்தைச் சேர்ந்த கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரி தான் தற்போது சுப்பிரமணிய சுவாமிக்கு யாகம் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications