உ.பி.யில் பஞ்சாயத்து தலைவரானார் பிச்சைக்காரர்: மக்களின் கலக்கல் தேர்வு
பதாயு: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல்வாதிகளைப் பார்த்து பார்த்து சலித்துப் போய் விட்டதாலோ, என்னவோ, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சஹாவர் ஷா கிராம மக்கள் சற்று வித்தியாசமாக இருக்கட்டும் என்று ஒரு பிச்சைக்காரரை பஞ்சாயத்து தலைவராக்கி விட்டனர்.
சஹாவர் ஷா பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு மொத்தம் 8 பேர் போட்டியிட்டனர். ஆனால் பொதுமக்களோ 70 வயதாகும் நாராயண் நட் என்னும் பிச்சைக்காரரைத் தலைவராகத் தேந்தெடுத்துள்ளனர்.
நாராயணன் நட், கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வரும் பழுத்த அனுபவசாலி ஆவார்.
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நட் அதுகுறித்துக் கூறுகையில், கிராமத் தலைவராவோம் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை என்று ஆச்சரியத்துடன் தெரிவித்தார். ஆனால் கிராம மக்களோ அவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் கூட தனது தொழிலைக் கைவிடவில்லை நட். தொடர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். தான் தொடர்ந்து பிச்சை தான் எடுக்கப் போவதாகவும், அரசாங்கப் பணத்தை கிராம வளர்ச்சிக்கு செலவிடப் போவதாகவும் அவர் கூறுகிறார்.
கடந்த மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் நட் தெருவில் பிச்சை எடு்ப்பதை நிறுத்தவில்லை. நட் தனி மனிதர் அல்ல, அவருக்கு 4 மகன்களும், 14 பேரன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications