For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாமீன் கிடைத்தும் சிறையில் அடைபட்டுள்ள விக்கிலீக்ஸ் அதிபர் அசான்ஜே

Google Oneindia Tamil News

Julian Assange
லண்டன்: விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசான்ஜேவுக்கு ஜாமீன் கிடைத்தும் கூட அவரால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஜாமீனை எதிர்த்து ஸ்வீடன் அரசு வக்கீல்கள் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளதால் அசான்ஜே வெளியில் விடப்படவில்லை.

அமெரிக்காவின் மறுபக்கத்தை உலக நாடுகள் முன்பு வெட்டவெளிச்சமாக்கி வந்த நிலையில், ஸ்வீடனில் பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்கில் இங்கிலாந்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார் அசான்ஜே. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை 2,40,000 பவுண்டு ஜாமீனில் விடுதலை செய்து லண்டன் கோர்ட் உத்தரவிட்டது. நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. மேலும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், குறிப்பிட்ட இடத்தில்தான் தங்கியிருக்க வேண்டும், உள்ளூர் போலீஸ் நிலையத்தில் தினசரி மாலையில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ஆனால் இந்த ஜாமீனை எதிர்த்து ஸ்வீடன் அரசுத் தரப்பு அப்பீல் செய்யவுள்ளதால் அசான்ஜே விடுதலை செய்யப்படவில்லை. தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அசான்ஜேவுக்கு உத்தரவாதம் அளிக்க முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெமீமா கான், மைக் ஜேகர் உள்ளிட்டோர் முன்வந்துள்ளனர்.

English summary
WikiLeaks founder Julian Assange, a target of US ire for releasing secret cables, returned to a London jail on Tuesday pending an appeal over a decision to free him on 2,00,000 pound bail for alleged sex crimes. British judge Howard Riddle had initially granted Assange bail but prosecutors, representing Swedish authorities, challenged the decision before the 39-year-old Australian had left the court in central London.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X