விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு சந்திரபாபு நாயுடு சாகும் வரை உண்ணாவிரதம்
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த ஓராண்டில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி இன்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளார்.
ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி அறிவித்துள்ள நிவாரண நிதி அதிருப்தி அளிக்கிறது. அது யானை பசிக்கு சோளப்பொறி போன்றிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஹைதராபாத், ஆதர்ஷ் நகரில் இருக்கும் புதிய எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்பில் தனது உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளார் நாயுடு. முன்னதாக என்.டி.ஆர். கட்டில் இருக்கும் என்.டி. ராமாராவ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். என்.டி.ராமாராவ் உயிருடன் இருந்தபோது அவரைக் கவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடித்தவர் நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை உறுப்பினர் நந்தமுரி ஹரிகிருஷ்ணா (இவர் என்டிஆர் மகன்), முன்னாள் அமைச்சர் கே. எர்ரன் நாயுடு, மூத்த தலைவர்கள் நாகம் ஜனார்தன ரெட்டி, டி. தேவேந்தர் கௌட் மற்றும் 10 எம்.எல்.ஏ. க்கள் நாயுடுவுடன் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது,
விவசாயிகளின் துயரத்தை நினைக்கையில் எனக்கு கண்ணீர் வருகிறது. கடந்த ஒராண்டில் மட்டும் குறைந்தது 5 தடவையாவது இயற்கை சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்சேதம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவ அரசு தவறிவிட்டது.
நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரமும், பருத்தி, புகையிலை போன்ற வர்த்தக பயிர்கள் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரமும் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications