அகில இந்திய காங்கிரஸ் 3 நாள் மாநாடு-டெல்லியில் இன்று தொடக்கம்: ஊழல்-சட்டசபை தேர்தல்கள் குறித்து விவா

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh and Sonia
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு இன்று டெல்லியில் தொடங்கியது. இதில் ஊழல் விவகாரங்கள் தொடர்பாக எதிர்க் கட்சிகளுக்கு பதில் அளிப்பது குறித்தும், தமிழக-மேற்கு வங்க சட்டசபை தேர்தல்களுக்கு வியூகம் வகுப்பது குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

டெல்லி-சண்டீகர் சாலையில் உள்ள புராரி என்ற இடத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. இது அந்தக் கட்சியின் 83வது மாநாடு ஆகும்.

இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்பட சுமார் 20,000 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

மாநாட்டில் பங்கேற்போருக்காக உணவுக் கூடங்கள், வெந்நீர்-ஹீட்டர் வசதியுடன் கூடிய குளியலறைகள், மருத்துவ மையம், தகவல் தொடர்பு மையங்கள், 450 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5,000 பேர் மாநாட்டு கூடாரங்களிலும், மற்றவர்கள் ஹோட்டல்களிலும் தங்க உள்ளனர்.

மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு, டெல்லி மாநில அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் மத்திய அரசு சிக்கித் தவிக்கும் நிலையில், இந்த மாநாடு நடைபெறுகிறது. எனவே, ஊழல் குறித்த விமர்சனங்களை முறியடிப்பது பற்றியும், பதிலடி கொடுப்பது பற்றியும் இதில் விவாதிக்கப்படும்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கான வியூகம் வகுப்பது குறித்தும், கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+