ராடியா வீட்டுக்குச் சென்று சிபிஐ விசாரணை-ஆஜராக அவகாசம் கேட்கிறார் ராஜா

நேற்று இதே வழக்கில் முன்னாள் டிராய் அமைப்பின் தலைவர் பிரதீப் பைஜால் 3 மணி நேரம் விசாரிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
இன்று காலை பத்து மணியளவில் ராடியாவின் சத்திரபூர் பண்ணை வீட்டுக்கு சிபிஐ குழு விரைந்தது. அங்கு வைத்து ராடியாவிடம் விசாரணை நடைபெற்றது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராடியாவுக்கு உள்ள தொடர்புகள் உள்ளிட்டவை குறித்து விசாரிக்கப்பட்டது.
முன்னதாக சமீபத்தில் ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திலும், அவரது வீடு, பண்ணை வீட்டிலும் 2 முறை சிபிஐ
அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர் என்பது நினைவிருக்கலாம்.
பண மோசடி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ராடியாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் 9வது பிரிவின் கீழ் விரைவில் ராடியா மீது வழக்கு தொடரப்படலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அரசுப் பணிகளில் தனது செல்வாக்கின் மூலம் தலையிட்டு ஆதாயம் பார்த்துள்ளார் ராடியா என்று சிபிஐ கருதுகிறது.
இன்றைய விசாரணையின்போது பல முக்கியத் தகவல்களை சிபிஐ கேட்டுப் பெற்றதாக தெரிகிறது. மீண்டும் ராடியாவை சிபிஐ விசாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்று ராடியாவை விசாரணைக்குட்படுத்தியபோது ஒரு பெண் அதிகாரியும் உடன் இருந்தார். ராடியா அலுவலகம், வீடு ஆகியவற்றில் கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்கள் குறித்து ராடியாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை ராடியா மறுத்தாராம். இருப்பினும் சில முக்கிய ஆவணங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் துருவித் துருவி கேட்டுள்ளனர்.
இதற்கிடையே ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சிபிஐ அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பும் அளித்து வருகிறோம். எதிர்காலத்திலும் இந்த ஒத்துழைப்பு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவகாசம் கேட்கும் ராஜா:
இதற்கிடையே சிபிஐ விசாரணைக்கு வருமாறு கூறி சம்மன் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா சிறிது கால அவகாசம் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வார இறுதியில் அவரை விசாரிக்க சிபிஐ திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக ராஜா தரப்பிலிருந்து சிபிஐக்குத் தகவல் போயுள்ளதாம்.
எனவே இந்த வாரத்திற்குள் ராஜா விசாரிக்கப்படும் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications