தந்தையிடம் இருந்து மோகன் பகான் கிளப்பை வாங்கும் சித்தார்த் மல்லையா: விஜய் மல்லையா ராஜினாமா

கடந்த 16-ம் தேதி கொல்கத்தாவில் மோகன் பகான் கிளப்பின் கூட்டம் நடந்தது. அதில்தான் மல்லையா தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்ததார்.
மோகன் பகானின் செயலாக்க மேனேஜரான பிரின்ஸ் ரூபஸ் சித்தார்த் மல்லையா கிளப்பின் கூடுதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இது குறித்து ரூபஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஜய் மல்லையா யுனைடெட் மோகன் பகான் புட்பால் டீம் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் மற்றும் இயக்குநர் குழு தலைவர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா முடிவை வருத்தத்துடன் இயக்குநர் குழு பெற்றுக் கொண்டது," என்று அதில் கூறப்பட்டிருந்தது.
மோகன் பகான் மற்றும் ஈஸ்ட் பெங்கால் ஆகிய இரண்டு கிளப்புகளின் தலைவராக மல்லையா இருக்க முடியாது. இது ஆசிய கால்பந்து சம்மேளன விதிகளுக்கு புறம்பானதாகும். அதனால் அவர் ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அனைத்து இந்திய கால்பந்து சம்மேளன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆசிய கால்பந்து சம்மேளன கிளப் உரிம விதிப்படி எந்த ஒரு தனி நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட கிளப்புகளில் 50 சதவிகிதத்திற்கு அதிகமாக பங்குகள் வைத்திருக்கக் கூடாது. இந்த விதி 2010-2011 சீசன் முடிவதற்குள் அமல்படுத்தப்படும். அதனால் ஏதாவது ஒரு கிளப்பில் ராஜினாமா செய்யத்தான் வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மோகன் பகன் மற்றும் ஈஸ்ட் பெங்கால் கிளப்புகளை மெக்டோவல் மற்றும் கிங்பிஷர் ஸ்பான்சர் செய்தாலும், இரண்டுமே மல்லையாவின் சொந்தமான யுனைடெட் ப்ரூவரீஸ் குரூப்-க்கு சொந்தமானவை.
வரும் 24-ம் தேதிக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட கிளப்புகள் வைத்திருப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க ஏஎப்சி கெடு விதித்துள்ளது.
வரும் 31-ம் தேதிக்குள் கட்டளை விதிகளை பூர்த்தி செய்யாத கிள்பபுகள் வரும் லீக்கில் விளையாட முடியாது என்று அனைத்து இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் பிரபுல் படேல் அறிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications