For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

70 ஆயிரம் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு: பணிகள் கடும் பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மற்றும் புதுவை வழக்கறிஞகர்கள் மத்திய அரசு வழக்கறிஞர்கள் புதிய சட்டமான 2010 ஐ அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று முதல் 3 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் மற்றும் புதுவை வழக்கறிஞர்கள் 70 ஆயிரம் பேர் நேற்று முதல் 3 நாட்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சேமநல நிதியை தற்போதுள்ள ரூ. 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தக் கோரி, ஊழல் நீதிபதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தகவலை தமிழகம் மற்றும் புதுவை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம் தெரிவித்தார்.

வழக்கறிஞர்கள் கூண்டோடு போராடச் சென்றுவி்ட்டதால் நீதிமன்றப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

எங்கள் கோரிக்கைகளை முன்வைத்து முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதவை நீதிமன்றங்களை நேற்று முதல் 3 நாட்களுக்கு புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த கட்டமாக வரும் ஜனவரியில் தொடர் போராட்டம் நடத்துவது குறி்தது வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தமிழகம் மற்றும் புதுவை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

English summary
70, 000 lawyers from TN and Puducherry boycott courts for 3 days from yesterday. Urging some demands the lawyers will strike work till tomorrow. As a result of this, court works have be affected severely
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X