ரோம் நகரில் சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பார்சல் குண்டுவெடித்து ஒருவர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
ரோம்: இத்தாலியின் ரோம் நகரில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் இன்று பார்சல் குண்டு வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்தார்.
ரோம் நகரின் வி்ல்லா குளோரி பார்க் பகுதியில் உள்ள இந்த தூதரகத்துக்கு வந்த பார்சல்களை பிரித்துக் கொண்டிருந்தபோது ஒரு பார்சலில் இருந்த குண்டு வெடித்தது. இதில் பார்சல் பிரிவில் பணியாற்றும் சுவி்ஸ் நாட்டு நபர் படுகாயமடைந்தார்.
நேற்று முன் தினம் ரோம் ரயில் ஒன்றில் ஒரு நாட்டு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந் நிலையில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
இந்த சம்பவத்துக்குக் காரணம் யார் என்று தெரியவில்லை என்று ரோம் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். இது தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications