நெல்லை: 20 உள்ளாட்சி பதவிகளுக்கு ஜனவரி 10ல் இடைத்தேர்தல்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 20 உள்ளாட்சி இடங்களுக்கு வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தவங்கியது.
நெல்லை மாவட்டத்தில் 20 உள்ளாட்சி பதவி இடங்கள் காலியாக உள்ளன. பணகுடி நகர பஞ்சாயத்து 9வது வார்டு கவுன்சிலர், தென்காசி யூனியன் 6வது வார்டு கவுன்சிலர் பதவிகள் காலியாக உள்ளன.
நான்குநேரி யூனியன் மறுகால்குறிச்சி, சிங்கனேரி களக்காடு யூனியன் இடையன்குளம், மனூர் யூனியன் அலங்காரபேரி, குருவிகுளம் யூனியன் புளியங்குளம் ஆகிய 5 இடங்களில் பஞ்சாயத்து தலைவர் பதவி, கூந்தன்குளம், செவல்குளம் உள்பட 13 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளன.
இந்த பதவிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. நேற்று மறுகால்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மட்டும் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்ய வருகிற 29-ம் தேதி கடைசி நாளாகும். 30-ம் தேதி வேட்பு மனுக்கள் பரீசிலனை செய்யப்படும். ஜனவரி மாதம் 3-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். ஜனவரி 10-ம் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு 12ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.












Click it and Unblock the Notifications