2ஜி வழக்கு-ராசாவிடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ மாரத்தான் விசாரணை!

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா, நீரா ராடியா, முன்னாள் டிராய் தலைவர் பிரதீப் பைஜால் உள்ளிட்டோரின் இல்லங்கள், அலுவலகங்கள் சிபிஐ சோதனைக்குள்ளாகின. மேலும், ராசாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்களிலும் ரெய்டுகள் நடந்தன. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து தற்போது இவர்களிடம் விசாரணை தொடங்கியுள்ளது. ராடியா, பைஜாலிடம் ஏற்கனவே விசாரணை நடந்து விட்டது. இந்த நிலையில் ராசாவிடம் இன்று விசாரணை தொடங்கியது.
இதற்காக அவர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி இன்று காலை பத்தே முக்கால் மணிக்கு ராசா அஹ்கு வந்தார்.
அதன் பின்னர் அவரிடம் சிபிஐ குழ விசாரணையைத் தொடங்கியது. காலையில் தொடங்கிய விசாரணை இடைவிடாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. மாலை ஆறே கால் மணி நிலவரப்படி, விசாரணை முடிவடையவில்லை. 7 மணி நேரத்திற்கும் மேலாக ராசாவை சிபிஐ விசாரித்து வருகிறது.
சிஆர்பிசி (குற்றவியல் சட்டம்) பிரிவு 160ன் கீழ் ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன் கீழ் ராசாவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்படவுள்ளன.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் பிரதமரின் அறிவுரையை மீறியது ஏன் என்பது உள்பட பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்படுவதாக தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications