ராஜாவுக்கு எதிராக அப்ரூவராக உதவியாளர் சந்தோலியா, ஸ்ரீவத்சவா முடிவு?
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு எதிராக அப்ரூவராக மாற அவரது முன்னாள் உதவியாளர்களான அதிகாரிகள் ஆர்.கே.சந்தோலியா மற்றும் ஏ.கே.ஸ்ரீவத்சவா ஆகியோர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில் ஏற்கனவே முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் டி.எஸ்.மாத்தூர் ஒரு சாட்சியாக சாட்சியம் அளித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். இதனால் ராஜாவுக்கு சிக்கல் வலுத்துள்ளது.
ராஜா அமைச்சராக இருந்தபோது அவருடைய தனிச் செயலாளராக இருந்தவர் சந்தோலியா. ஸ்ரீவத்சவா, தொலைத் தொடர்புத்துறையின் துணை இயக்குநராக இருந்தவர் ஆவார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது இவர்களும் அதில் முக்கியப் பங்காற்றியதாக கூறப்படுகிறது.
ஸ்ரீவத்சவாவை ஏற்கனவே பலமுறை சிபிஐ விசாரித்து விட்டது. இருப்பினும் சமீபத்தில்தான் சந்தோலியாவை சிபிஐ விசாரித்தது நினைவிருக்கலாம்.
ராஜா பதவி விலகிய பின்னர் கபில் சிபல் அமைச்சராக்கப்பட்டவுடன் முதல் வேலையாக தொலைத் தொடர்புத்துறையிலிருந்து, அவருடைய ஒரிஜினல் துறைக்கு மாற்றப்பட்டார் சந்தோலியா. சந்தோலியாவை தனது பொருளாதார ஆலோசகராக பயன்படுத்தி வந்தார் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications