ஷார்ஜாவில் இந்திய வர்த்தகவியலாளர் பேரவை துவக்கம்
இது குறித்து பேரவையின் இயக்குநர் ஜெனரல் ஸ்ரீபிரியா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பேரவையின் உறுப்பினர்களாக டாக்டர் ஆஸாத் மூப்பன் (டிஎம் குரூப்), டாக்டர் பி.ஆர்.ஷெட்டி (என்.எம்.சி. குரூப்), ஃபெரோஷ் அல்லனா (இஃப்கோ குரூப்), டாக்டர் ஜே.ஆர். கங்காரமணி (அல் ஃபரா குரூப்), ஜாய் ஆலுக்காஸ் (ஜாய் ஆலுக்காஸ் குரூப்), மிக்கி ஜக்டியனி (லேண்ட்மார்க் குரூப் , டாக்டர் ராம் புக்ஸானி (காஸ்மாஸ்), சுதேஷ் அகர்வால் (ஜியெண்ட் குரூப்), சன்னி வர்கி (வர்கி குரூப்), சையத் எம். ஸலாஹுத்தீன் (ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குரூப்), விஜய் மல்கோத்ரா (கேபிஎம்ஜி) மற்றும் யூசுஃப் அலி (எம்கே குரூப்) ஆகியோரு இருப்பர்.
இதனைத் தொடர்ந்து விரைவில் இளம் தலைமுறை இந்திய வர்த்தகவியலாளர்களைக் கொண்டு குழுவும் அமைக்கப்படும்.
இப்பேரவையின் தலைமையகம் உலகின் மிக உயரமான வணிக கேந்திரங்களில் ஒன்றாகக் கருதப்படும் புர்ஜ் கலீஃபாவில் செயல்படும். வளைகுடாவில் தொழில் புரிந்து வரும் இந்திய தொழிலதிபர்கள் இப்பேரவையில் உறுப்பினர்களாகச் சேர வரவேற்கப்படுவார்கள்.
இந்திய தூதர் இப்பேரவையின் புரவலராகவும், கன்சல் ஜெனரல் எக்ஸ் அபிஸியோ உறுப்பினராகவும், சுதேஷ் அகர்வால் தற்காலிகத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இப்பேரவை இந்திய வர்த்தகர்களிடையே ஒருங்கிணைப்பு, இந்திய மற்றும் அமீரகத்திற்கு இடையே வர்த்தக அதிகரிப்பு, முதலீடு, இந்திய வர்த்தகத்திற்கு உதவிடுதல், இந்திய வர்த்தகர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு எடுத்துச்சென்று தீர்வு பெற உதவுதல், கருத்தரங்குகள். இந்திய வர்த்தகம் பல்வேறு நாடுகளுக்கு பரவிட உதவிடுதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களைக் கொண்டு செயல்படும்.
விரைவில் இப்பேரவை அதிகாரப்பூர்வமாக இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா மற்றும் அமீரக வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஷேக்கா லுப்னா அல் காஸிமி ஆகியோரைக் கொண்டு துவங்கப்படும்.
ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் ( மத்திய கிழக்கு ) கடந்த நவம்பர் மாதம் இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மற்றும் ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications