For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாமக தலைமையில் கூட்டணி வர வாய்ப்பில்லை-ராமதாஸ் 'நம்பிக்கை'!

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபைத் தேர்தலில் எங்களது தலைமையில் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

பாமக சமூக முன்னேற்ற சங்கத்தில் பயிற்சி முடித்த களப்பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற ராமதாஸ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கடந்த பாராளுமன்ற தேர்தலை தவிர மற்ற எல்லா தேர்தல்களிலும் பா.ம.க. இடம் பெற்ற கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள். அது போல தேர்தல் கூட்டணி குறித்து பொங்கல் பண்டிகைக்கு பின்பு நல்ல முடிவு எடுப்போம். பா.ம.க. இடம் பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும். தமிழ்நாட்டில் பா.ம.க. தயவு இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது.

வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில் 3-வது அணி அமைய வாய்ப்பு இல்லை என்றார் ராமதாஸ்.

English summary
Dr.Ramadoss has rejected a third front led by PMK. He said in Chennai, There is no chance for third front, that too led by PMK. We will be in a winning front in the coming Assembly polls. Except last Parliament polls, in all other elections we were with the winning alliance, he said
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X