மதுரை கோயில்களுக்கு குண்டு மிரட்டல் கடிதங்கள்!
மதுரை: மதுரையின் முக்கிய கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணனுக்கு தொடர்ந்து 3 மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. அதில், மணிப் பாதிரியார் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் ஆகியவற்றை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த கடிதங்களுடன் மணிப் பாதிரியாரின் என்பவரின் விசிட்டிங் கார்டும் இணைக்கப்பட்டிருந்தது. இது குறித்து கருமுத்து கண்ணன் போலீசில் புகார் தந்தார்.
விசாரணையில் அந்தக் கடிதங்கள் திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்து போஸ்ட் செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் விசிட்டிங் கார்டில் இருந்த முகவரியில் சென்று போலீசார் விசாரித்தபோது அங்கு மணிப் பாதிரியார் என்று யாரும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
இந்த மிரட்டல் கடிதங்களையடுத்து மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு்ள்ளது.












Click it and Unblock the Notifications