தாயின் 50 வயது கள்ளக்காதலனின் கற்பழிப்பு முயற்சிக்குப் பலியான 10ம் வகுப்பு மாணவி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தாயின் 50 வயது கள்ள காதலன் 10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த சம்பவம் ஆழப்புழாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலப்புழா அருகே உள்ள காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி விஜயம்மா. இவர்களது மகள் அஸ்வினி. அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

குடும்ப தகராறு காரணமாக கடந்த 10 வருடமாக கோபாலகிருஷ்ணனும், விஜயம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விஜயம்மா மகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் விஜயம்மாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவபிரசாத் என்ற மீ்ன் வியாபாரிக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் ஓரே வீட்டில் வசித்து வந்தனர். சிவபிரசாத்துக்கு மனைவி குழந்தைகள் உண்டு.

இந்நிலையில் விஜயம்மாவு்ம், கோபால கிருஷ்ணனும் மீண்டும் சேர்ந்தனர். இதையடுத்து விஜயம்மா மகளை அழைத்து கொண்டு கணவனுடன் வசிக்க தொடங்கினார். இது சிவபிரசாத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விஜயம்மா தனது மகளிடம் சிவபிரசாத்துக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பினார். ஆனால் நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பவில்லை. அங்கு சென்று பார்த்தபோது அஸ்வதி படுக்கையில் இறந்த நிலையிலும், சிவபிரசாத் விஷம் குடித்து மயங்கிய நிலையிலும் கிடந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பலாத்கார முயற்சியில் அஸ்வதி இறந்ததால் சிவபிரசாத் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்ததுள்ளது. சிவபிரசாத்தை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+