பொதுக்கணக்கு குழு விசாரணையே போதும்-சுப்பிரமணிய சாமி
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் கமிட்டி விசாரணையே போதுமானு என்று கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. கூட்டுக் குழு அமைப்பதை நான் எதிர்க்கவில்லை. எனினும், நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணையே போதுமானது என்பது என் கருத்து.
பிரதமரை அழைத்து விசாரிக்க பொதுக் கணக்குக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்பதாலேயே, நாடாளுமன்றக் கூட்டுக் குழு வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. எனினும், பொது கணக்குக் குழு முன்பு ஆஜராக பிரதமர் தாமாகவே முன்வந்துள்ள நிலையில், இனி பிரச்சினை இல்லை.
பொதுக் கணக்குக் குழுவுக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷிதான் தலைவராக உள்ளார். அலைக்கற்றை தொடர்பான எல்லா விவரங்களும் அவருக்கு நன்கு தெரியும். எனவே, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான எல்லா விவரங்களையும் விசாரித்து, கண்டறிவதற்கான திறன் பொதுக் கணக்குக் குழுவுக்கு உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் வீட்டில் சி.பி.ஐ. கைப்பற்றிய டைரியில், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தொடர்புடைய முன்னணி அரசியல்வாதிகள் 5 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய இணையமைச்சராக இருந்து, அண்மையில் மாநில முதல்வராக பதவியேற்றவரும் அவர்களில் ஒருவர். இவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றார் சாமி.
முதல்வர் கருணாநிதிக்கு 'கெடு'!
இதற்கிடையே, தமிழக அரசின் வீட்டு வசதி வாரியம் மூலம், முறைகேடாக ஒதுக்கியுள்ள நிலம் மற்றும் வீடுகளை முதல்வர் கருணாநிதி, பொங்கல் பண்டிகைக்குள் திரும்ப பெற வேண்டும்,'' என சாமி புதுக் கெடு விதித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் கூறுகையில்,
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ.,யின் போக்கு சரியான திசையில் செல்கிறது. கடைசியில் என்ன ஆகிறது என்று பார்க்கலாம். இதில் என்னை அரசு வக்கீலாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி, வரும் 7ம் தேதி முடிவு தெரியும். நான் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டால், சி.பி.ஐ., நடவடிக்கையை துரிதப்படுத்துவேன்.
வரும் சட்டசபைத் தேர்தலில், தமிழகம், கேரளத்தில் ஜனதா கட்சி போட்டியிடும். தமிழகத்தில், முதல்வர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலம், வீடுகளை தவறாக பலருக்கு ஒதுக்கியுள்ளார்.
முறைகேடாக ஒதுக்கப்பட்ட அந்த நிலங்களை பொங்கல் பண்டிகைக்குள் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், தேர்தலுக்குள் அவர் மீது வழக்கு தொடருவேன் என்றார் சாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications