தேமுதிக பெண் நிர்வாகிகள் கட்சியை விட்டு நீக்கம்: விஜயகாந்த் அதிரடி
சென்னை: தேமுதிகவின் இரு முக்கிய பெண் நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் காஞ்சீபுரம் வடக்கு மாவட்டக் கழக மகளிரணி துணைச் செயலாளராக செயல்பட்டு வரும் குமாரி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இன்று முதல் நீக்கப்படுகிறார்.
அவருக்குப் பதிலாக பெருங்களத்தூர் பேரூர் கழக மகளிரணி செயலாளராக செயல்பட்டு வரும் குணசுந்தரி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட கழக மகளிரணி துணை செயலாளராக இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
அதே போல காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் புனித தாமஸ் மலை ஒன்றிய கழக மகளிரணி செயலாளராக செயல்பட்டு வரும் இ.பி. விஜயலட்சுமி கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்படுகிறார்.
புனித தாமஸ் மலை ஒன்றிய மகளிரணி செயலாளராக வி. திராவிடச் செல்வி இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அவர் செயல்பட்டு வந்த பீர்க்கங்கரணை பேரூர் கழக மகளிரணி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் இவ்வாறு தனது கட்சியின் நிர்வாகிகளை அறிக்கை விட்டு தூக்குவார். அதே பாணியை அவருடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகக் கருதப்படும் விஜய்காந்தும் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications