கூட்டணி குறித்து முடிவெடுக்க ஜெ.வுக்கு அதிகாரம் கொடுத்து அதிமுக தீர்மானம்
சென்னை: சட்டசபைத் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரத்தை கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குக் கொடுத்தும், திமுக அரசைக் கண்டித்தும் இன்று நடந்த அதிமுக செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னையில் இன்று அதிமுக பொதுக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் கூட்டப்பட்டன. வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி வெங்காடசலபதி பேலஸ் மஹாலில் இந்த கூட்டங்கள் நடைபெற்றன.
கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலை வகிக்க, அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பங்கேற்க வந்த ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். பின்னர் கூட்டங்கள் தொடங்கின.
இக்கூட்டத்தில், வரும் தமிழக சட்டசபைத்தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழலால் தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைக்குனிவு, தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்நது கொல்லப்படுவதைத் தடுக்க முயலாதது ஆகியவற்றுக்கு காரணமான திமுக அரசைக் கண்டித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications