For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆளுநரை சந்தித்தார் எதியூரப்பா

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக ஆளுநர் பரத்வாஜை, முதல்வர் எதியூரப்பா சந்தித்துப் பேசினார்.

சமீப காலமாக கர்நாடக மாநிலத்தில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென பல்டி அடித்த எதியூரப்பா, ஆளுநரை புகழ்ந்து பேசினார். மேலும் அவரை சந்தித்துப் பேசுவேன் என்றும் கூறியிருந்தார்.

அதன்படி இன்று அவர் ஆளுநரை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இது வழக்கமான சந்திப்புதான். வழக்கமாக 15 நாட்களுக்கு ஒரு முறை ஆளுநரை சந்திப்பேன். தற்போது கர்நாடக சட்டசபையின் கூட்டுக் கூட்டத்திற்கு அழைப்பதற்காக வந்தேன் என்றார் எதியூரப்பா.

இருப்பினும் இந்த சந்திப்பின்போது பல்வேறு சர்ச்சைகளில் தனது நிலைப்பாடு குறித்து ஆளுநரிடம் எதியூரப்பா விளக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

English summary
Karnataka Chief Minister B.S. Yeddyurappa met Governor H.R. Bhardwaj in a bid to end the war of words between them Friday, exactly a week after dropping plans to complain to President Pratibha Patil against him. ''As promised I met the governor and I will meet him every fortnight. I have publicly committed to it,” Yeddyurappa,told reporters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X