கோவில்பட்டியில் பயணிகள் கூட்டத்தில் பஸ் புகுந்து 5 பேர் பலி
கோவில்பட்டி: கோவில்பட்டியில் தாறுமறாக ஓடிய தனியார் பஸ் பயணிகள் கூட்டத்தில் புகுந்ததில் 5 பேர் உடல் நசுங்கி பலியாயினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் இருந்து நேற்று இரவு 9.30 மணிக்கு ஒரு தனியார் பஸ் டீசல் போட்டு விட்டு கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தது.
வேலாயுதபுரம் பாலத்தில் வரும்போது திடீரென பஸ் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரயில் நிலையம் முன்பு பஸ்சுக்காக காத்திருந்த கூட்டத்தில் புகுந்தது. பி்ன்னர் அங்கிருந்த கார், பைக் மீது மோதி நின்றது. இதில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் இறந்தார்.
கார் டிரைவர் சிவகாசியைச் சேர்ந்த சீனிவாசன் படுகாயத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி டிஎஸ்பி சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பலியானவர்கள் பெயர் விபரம் தெரிய வந்துள்ளது.
1. கார்மேகம்-சங்கரன்கோவில்
2.பால்பாண்டியன்-மதுரை, மேலூர்
3. முத்துகுமார், சிந்தாமணி நகர், கோவி்ல்பட்டி
4. முத்துகுமாரின் மனைவி வேலம்மாள்
5. முத்துகுமாரின் மகன் பிரகாஷ்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications