காரைக்காலில் பழமையான பாலம் சேதம்: போக்குவரத்து நிறுத்தம்
காரைக்கால்: தேசிய நெடுஞ்சாலையில் நாகபட்டினத்தையும் காரைக்காலையும் இணைக்கும் பழமை வாய்ந்த பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் டி. ஆர். பட்டினத்தில் உள்ளது திருமலைராஜனார் பாலம். இந்த பாலம் கடந்த 1853-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டவர்களால் கட்டப்பட்டது. நேற்று இதன் அடிப்பகுதியில் திடீர் என்று செங்கல் கற்கள் பெயர்ந்து விழுந்தன. இந்த தகவல் அறிந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் பாலத்தை பார்வையிட்டனர்.
பாலம் இனி வாகனப் போக்குவரத்திற்கு பயன்படாது என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழியாக கிறித்தவர்களின் புனிதத் தலமான வேலாங்கண்ணிக்கு செல்லும் வாகனங்கள் வேறு வழியாகத் திருப்பிவிடப்பட்டன. மேலும், நாகப்பட்டினம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் பனங்காட்டான்குடி வழியாகத் திருப்பிவிடப்பட்டன.
இந்த பாலம் பழுதடைந்து இருப்பதாக நெடுங்காலமாகவே மக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications