சென்னை: தீப்பிடித்து எரிந்த சிலிண்டர் பொருத்தப்பட்ட பள்ளி வேன்
சென்னை: காஸ் சிலிண்டரில் இயங்கும் பள்ளிக்கூட வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் பீதியடைந்து ஓடினர்.
சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில், ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. அப்பள்ளி அருகே இன்று காலை ஒரு மாருதி ஆம்னி வேன் நிறுத்தப்பட்டிருந்தது.
கால்டாக்சி நிறுவனத்திற்குச் சொந்தமானது இந்த வேன். இதில் ஆட்களை ஏற்றிச் சென்று வருகிறார்கள். இந்தநிலையில் அந்த வேனின் பேட்டரி பகுதியிலிருந்து புகை வரத் தொடங்கியது. இதையடுத்து வேனில் இருந்த நபர் வெளியே குதித்தார். அடுத்த சில விநாடிகளில் வேன் குபீரென தீப்பிடித்து எரிந்தது.
தீயில் பட்டு வேன் கண்ணாடிகள் சிதறின. இதைப் பார்த்து அப்பகுதியில் இருந்தவர்கள், பள்ளிக்கு வந்து கொண்டிருந்த மாணவ, மாணவியர் பீதியடைந்து ஓடினர். இருப்பினும் வேனில் பொருத்தப்பட்டிருந்த காஸ் சிலிண்டர் வெடிக்கவில்லை. அது வெடித்திருந்தால் மிகப் பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
வேப்பேரி போலீஸார் விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினரும் விரைந்து தீயை அணைத்தனர்.
வேனை ஓட்டி வந்த நபர் தப்பி விட்டார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications