ஜான்பாண்டியன் கட்சி கொடி கிழிப்பு: மறியல் செய்தவர்கள் விரட்டியடிப்பு

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி: கோவில்பட்டியில் ஜான்பாண்டியன் கட்சி கொடி கிழிக்கப்பட்டதால் அவரது கட்சியினர் ஆத்திரமடைந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன். இவர் கடந்த நவம்பர் மாதம் சேலம் சிறையில் இருந்து விடுதலையானதில் இருந்து கட்சியை பலப்படுத்தி வருகிறார். இதற்காக அவர் ஊர் ஊராக சென்று கட்சி கொடியேற்றுகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் அவர் கொடியேற்றினார். நேற்று முன்தினம் நள்ளிரவு சிலர் அங்குள்ள கொடிகம்ப கயிற்றை அறுத்து கொடியை கிழித்து எறிந்துள்ளனர். நேற்று அதிகாலை இதுபற்றி அங்குள்ள கிளைசெயலாளர் செல்வராஜிக்கு தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரது தலைமையில் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து மறியல் செய்ய முயன்றனர்.

தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். நடந்தது பற்றி முதலில் புகார் கொடுங்கள், பிறகு நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று இன்ஸ்பெக்டர் பாலாஜி தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் காவல் நிலையம் சென்று புகார் மனு கொடுத்தனர்.

அதன்பிறகு அவர்கள் கலைந்து செல்லாமல் மீ்ண்டும் மெயின் ரோட்டில் மறியல் செய்ய முயன்றனர். இதனால் பதற்றம் ஏற்படவே 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் மறியல் நடத்த வேண்டாம், ஆர்ப்பாட்டம் வேண்டுமென்றால் நடத்தி கொள்ளுங்கள் என்றனர்.

அதை அவர்கள் ஏற்றுகொண்டனர். இதை தொடர்ந்து சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். திடீரென அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+