கே.ஜி.பாலகிருஷ்ணன் விவகாரம் குறித்து பேசக் கூடாது என நெருக்குதல்-கிருஷ்ணய்யர்

இருப்பினும் அந்த நீதிபதியின் பெயரை கிருஷ்ணய்யர் வெளியிடவில்லை.
இதுகுறித்து கிருஷ்ணய்யர் கூறுகையில், கே.ஜி.பாலகிருஷ்ணன் குறித்து பிரதமருக்குக் கடிதம் எழுதக் கூடாது என்று அந்த நீதிபதி என்னைக் கேட்டுக் கொண்டார். கிட்டத்தட்ட அது ஒரு நெருக்குதல்தான். இருந்தாலும் நான் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை.
கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகன் ஸ்ரீனிஜனின் சொத்துக்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியம்.
இப்போதைக்கு இதுதொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதும் திட்டம் எனக்கு இல்லை. பிரதமருக்கே இதுகுறித்து மீடியாக்கள் மூலம் தெரிந்திருக்கும் என கருதுகிறேன். எனவே அவரை நடவடிக்கை எடுப்பார் என்றும் எதிர்பார்க்கிறேன்.
இந்த விவகாரங்கள் தொடர்பாக கே.ஜி.பாலகிருஷ்ணன் இதுவரை என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.
அவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவது நல்லது.விசாரணையை அவர் எதிர்கொள்ள வேண்டும். இருப்பினும் முடிவெடுக்க வேண்டியது அவர்தான்.
பாலகிருஷ்ணன் மீது மட்டுமல்லாமல், அவரது சகோதரர், மகன், மருமகன்கள், மகள்கள் என ஒட்டுமொத்த குடும்பத்தினர் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை.
எனது இந்தக் கோரிக்கைக்கு நிறையப் பேர் ஆதரவு அளித்துள்ளனர் என்றார் அவர்.
இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி, இது ஐயருக்கும், தலித்துக்கும் இடையிலான பிரச்சினை என்று கூறியிருப்பது குறித்து கிருஷ்ணய்யர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். கருணாநிதி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்று மட்டும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
