சிவகாசி அருகே அம்பேத்கர் படம் அவமதிப்பு : மறியலில் குதித்த மக்கள்
சிவகாசி: சிவகாசி அருகே டாக்டர் அம்பேத்கர் படத்தை அவமதிப்பு செய்தவர்கள் மீது உடனே உரிய நவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.
சிவகாசி ஆலங்குளம் சாலையில் மாதாகோயில்பட்டி அருகில் உள்ளது கிளியம்பட்டி மற்றும் மேலாண்மறைநாடு. இங்கு வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் படங்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேனர்களை மர்ம நபர்கள் சிலர் அவமரியாதை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை கண்டிக்கும வகையில் இளஞ்சிறுத்தைகள் பாசறை மாவட்ட செயலாளர் சதுரகிரி தலைமையில் பொதுமக்கள் மாதாகோயில்பட்டியில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தாசில்தார் சாந்தி, சிவகாசி டிஎஸ்பி முருகேசன், சாத்தூர் டிஎஸ்பி சாகுல்ஹமீது ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம், குற்றவாளிகள் மீது உரிய நவடிக்கை எடுப்பதாகக் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் சிவகாசியிலிருந்து விளாம்பட்டி, ஆலம்பட்டி வழியாக போக்குவரத்து சிறுது நேரம் தடைபட்டது.












Click it and Unblock the Notifications