For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நித்தியானந்தாவுடன் படுக்கையில் இருப்பது நடிகை ரஞ்சிதாதான்-கர்நாடக போலீஸ் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

பெங்களூர்: சாமியார் நித்தியானந்தாவுடன் படுக்கை அறையிலும், படுக்கையிலும் இருப்பது நடிகை ரஞ்சிதாதான். இது தடயவியல் ஆய்வில் தெளவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக சிஐடி போலீஸார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று சமீபத்தில் ரஞ்சிதா கூறியிருந்தார். மேலும் இந்த வீடியோவை வெளியிட்ட லெனின் கருப்பன் தன்னைக் கற்பழிக்க முயன்றதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.

ஆனால் ரஞ்சிதாவின் கூற்றை கர்நாடக சிஐடி போலீஸார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். வீடியோவில் இருப்பது சாட்சாத் ரஞ்சிதாததான் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிஐடிதரப்பில் கூறுகையில், சம்பந்தப்பட்ட வீடியோவை சண்டிகர், ஹைதராபாத்தில் உள்ள தடவியல் கழகங்களுக்கு அனுப்பி விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் நித்தியானந்தா, ரஞ்சிதாவின் தனித் தனிப் படங்களுடனும் அவை ஒப்பிடப்பட்டன.

இதில் வீடியோவில் உள்ள படங்கள் மிகத் தெளிவானவை, சரியானவை என்றும், நித்தியானந்தா, ரஞ்சிதாவின் ஒரிஜினல் படங்களுடன் இவை ஒத்துப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த வீடியோவில் எந்தவிதமான சேர்ப்போ, மார்பிங்கோ நடைபெறவில்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

உலகின் எந்த மூலைக்கு இதை அனுப்பினாலும் நாங்கள் சொல்வது சரியே என்பது நிரூபணமாகும். இதை எங்கு போய் நிரூபிக்க வேண்டும் என்றாலும் அதற்கு கர்நாடக சிஐடி போலீஸார் தயார் என்றனர்.

மேலும் லெனின் மீதான ரஞ்சிதாவின் புகாரையும் கர்நாடக சிஐடி போலீஸ் சீரியஸாக எடுக்கவில்லையாம். அவர் சொல்வது உண்மையாக இல்லை என்று கர்நாடக போலீஸ் கருதுகிறது.

English summary
Karnataka CID has thwarted the claims by Actress Ranjitha that she was not part of the Swami Nithyananda sex video. The investigators have now said forensic reports show that she was indeed in the video. Investigators had already checked and crosschecked to ascertain the video's genuinity when the scam was busted. Just to be sure, officials had sent the CD to the FSL in Hyderabad and Chandigarh, along with separate images of both Nithyananda and Ranjitha. FSL experts, who tallied the video images with the photographs have confirmed that the images are genuine and are neither morphed nor any body double has been used, as claimed by Ranjitha earlier, sources in the CID said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X