அதிமுக தலைமையை விமர்சித்து விளம்பரம்: தேமுதிகவுக்கு தொடர்பில்லை-விஜயகாந்த்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 9ம் தேதி சேலத்தில் தேமுதிக சார்பில் மாபெரும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு சிறப்பாக நடைபெறவுள்ளது. அதனையொட்டி கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், ஆதரவாளர்களும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து வருகின்றனர்.
சற்றும் எதிர்பாராத வகையில் பத்திரிக்கை ஒன்றில் 7.1.2011 அன்று முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைமையை விமர்சித்து தேமுதிக நிர்வாகிகளின் பெயரில் ஒரு விளம்பரம் வந்துள்ளது.
தேமுதிகவுக்கும் அந்த விளம்பரத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தேமுதிக நிர்வாகிகளான வி.சி. சந்திரகுமார் (கொள்கை பரப்புச் செயலாளர்) கே. செந்தாமரைக்கண்ணன் (மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்), விசாகராஜன் (துறைமுகப் பகுதிச் செயலாளர்), ஆர். கோவிந்தன் (ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர்) ஆகியோர் பெயரில் இந்த போலி விளம்பரம் வந்துள்ளதால் இந்த அற்பக் காரியத்தை செய்த அந்த சமூக விரோதிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேமுதிகவைப் பொறுத்தவரை தெளிவான அரசியல் சிந்தனையுடன் இந்த மாநாட்டை நடத்துகிறது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேரவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் விஜய்காந்த் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications