ஜெர்மன் வங்கிகளில் தமிழர்களின் கறுப்பு பணம்-சிபிஐ!
மதுரை: சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் ரூ. 27 லட்சம் கோடி உள்ளது. அதே போல ஜெர்மன் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழர்கள் 15 பேரின் பெயர்களும் உள்ளன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வை கண்டித்து மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய பாண்டியன்,
மத்திய அமைச்சர் சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதல் பெற்று தான் நீரா ராடியாவின் போன் பேச்சுக்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் மொரீஷியஸ் சென்று விட்டது. இந்த வழக்கில் சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் சென்று தேவைப்பட்டால் யாரையும் கைது செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் கபில் சிபில், மோசடி செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.
தவறாக ஸ்பெக்ட்ரம் பெற்ற 6 நிறுவனங்களுக்கு விதித்த ரூ.210 கோடி ரூபாய் அபராதத்தில் இது வரை, ரூ. 177 கோடி வசூலாகியுள்ளது. இதன் மூலம் தகுதியற்ற நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது நிரூபணமாகியுள்ளது. இதற்கு திமுக பதில் கூற வேண்டும்.
சுவிஸ் வங்கியில் இந்திய கருப்பு பணம் 27 லட்சம் கோடி ரூபாய் உள்ளது. இது போல் உலகில் 16 வங்கிகள் உள்ளன. ஜெர்மன் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழர்கள் 15 பேரின் பெயர்கள் உள்ளன.
ஜனநாயகத்தை மீட்க திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அதிமுகஅணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, பார்வர்ட் பிளாக் ஆகியவை உள்ளன. இந்த வரிசையில் மேலும் ஒரு கட்சி இடம் பெற உள்ளது என்றார்.
ஆனால் அந்த கட்சியின் பெயரை அவர் வெளியிடவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications