அடிக்கடி மாறும் நெல்லை தேமுதிக செயலாளர்கள்: அதிருப்தியில் கட்சியினர்
நெல்லை: நெல்லை மேற்கு மாவட்ட தேமுதிகவில் அடிக்கடி மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவதால் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இயன்றதை செய்வோம், இல்லாதவர்களுக்கே. வறுமையையும், ஊழலையும் ஒழி்ப்போம் என்ற முழக்கத்தோடு மதுரையிலிருந்து குரல் கொடுத்து தமிழக அரசியலில் கால் பதித்த நடிகர் விஜயகாந்தின் தேமுதிக தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும், வாக்கு வங்கியை சிதைக்கும் என அரசியல் நோக்கர்களால் கருதப்பட்டது.
முதல் சட்டமன்ற தேர்தலும் சரி, அடுத்த வந்த பாராளுமன்ற தேர்தலும் சரி இரு பொது தேர்தல்களிலும், இடை தேர்தல்களிலும் தேமுதிக வாக்கு சதவீதத்தை ஓரளவுக்கு பிரித்து பிடித்தது. இந்நிலையில் கட்சிக்காக இரவு, பகல் பாராது உழைத்தவர்கள் ஓரம்கட்டப்பட்டனர்.
இதில் நெல்லை மேற்கு மாவட்டமும் அடங்கும். மாவட்ட செயலாளராக ஆரம்பத்தில் இருந்தே கட்சிக்காக உழைத்த திருப்பதி என்பவரை தேமுதிக ஓரம்கட்டி திவ்யா ரங்கன் என்பவரை நியமித்தது. அவரும் சுறுசுறுப்புடன் நகர, ஒன்றிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று சேலத்தில் நடைபெறும் மக்கள் உரிமை மாநாட்டிற்கு திரண்டு வருமாறு நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுத்து வந்த நிலையில் திடீரென கட்சி தொலைக்காட்சியில் அவர் பதவி பறிக்கப்பட்டு கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த வேறொருவரை இரண்டு மாதத்திற்குள் 3வது மாவட்ட செயலாளராக நியமித்தது.
இந்நிலையில் இவர் கடந்த வாரம் சங்கரன்கோவிலில் கட்சியின் நகர, ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியுள்ளார். இக்கூட்டத்திற்கு சங்கரன்கோவி்ல் நகர தலைவரை தவிர வேறு நகர, ஒன்றிய தலைவர்கள் செல்லவில்லையாம்.
இது குறித்து தேமுதிக மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது,
6 மாதத்தில் 3 மாவட்ட செயலாளர்களை கட்சி தலைமை நியமனம் செய்துள்ளது. இதனால் கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு பதவிகளை ராஜினாமா செய்து விடலாமா என்னும் எண்ணத்தில் உள்ளனர்.
இதற்கு காரணம் செலவுகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கட்சியில் அன்றாடம் கூலி வேலை பார்ப்பவர்கள் உள்ளனர். பணக்காரர்கள் இல்லை. கட்சி தலைமை தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றார்.
நெல்லை மேற்கு மாவட்டத்தில் தற்போது தேமுதிகவினர் அக்கட்சியிலிருந்து விலகி பிற கட்சிகளில் இணையத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications