பூடான் தலைநகர் திம்புவில் இந்தியா-பாக். வெளியுறவு செயலர்கள் பேச்சு
டெல்லி: பூடான் தலைநகர் திம்புவில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள் அடுத்த மாத தொடக்கத்தில் சந்தித்துப் பேசவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
திம்புவில் அடுத்த மாதம் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) நிலைக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும்போது இரு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்களும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
பாகி்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி இந்தியா வரவுள்ளார். அதற்கு முன்னதாக இந்தப் பேச்சுவார்த்தைக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பி்ப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சார்க் நிலைக்குழுக் கூட்டம் திம்புவில் நடைபெறுகிறது. அப்போது இரு நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்களும் சந்தித்துப் பேசலாம் என்று தெரிவித்தார்.
இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்கும்போது சாதகமான சூழலை ஏற்படுத்துவதற்கான முன்னோட்ட சந்திப்பாக இது கருதப்படுகிறது.
கடைசியாக இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ், பாகிஸ்தான் செயலாளர் சல்மான் பஷீரை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின்போது சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications