மன்மோகன், சோனியாவை சந்திக்கிறார்கள் தெலுங்கானா எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்
டெல்லி: தெலுங்கானா விவகாரம் தொடர்பாக அப்பிராந்தியத்தைச் சேர்ந்த எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவுள்ளனர்.
சங்கராந்தி தினமான ஜனவரி 15ம் தேதி டெல்லி சென்று இவர்கள் பிரதமரையும், சோனியாவையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி, தெலுங்கானாவுக்கான தீர்வை தெளிவாகச் சொல்லாமல் குழப்பமான பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது. இந்த அறிக்கை வெளியானது முதல் தெலுங்கானா பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் போராட்டத்தில் குதிப்பதைத் தடுக்கும் வகையில் பல்கலைக்கழகத்திற்கு வெளியே அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட மொத்தம் 70,000 படையினர் ஆந்திராவில் முகாமிட்டுள்ளனர். இவர்களில் 30 ஆயிரம் பேரை ஹைதராபாத்தில் குவித்து வைத்துள்ளனர். இந்தப் படையினரை வாபஸ் பெற வேண்டும் என தெலுங்கானா பகுதி எம்.பிக்கள் கோரியுள்ளனர். ஆனால் அதை முதல்வர் கிரண் குமார் ரெட்டி நிராகரித்துள்ளார். இவை மத்திய அரசின் படை, என்னால் எதுவும் செய்ய முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து வருகிற 15ம்தேதி டெல்லி சென்று பிரதமரையும், சோனியாவையும் சந்தித்து படையினரை வாபஸ் பெறுமாறு கோர தெலுங்கானா பகுதி எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் திட்டமிட்டுள்ளனர். மேலும் உடனடியாக தெலுங்கானாதனி மாநிலத்தை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரவுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications