ஓடும் ரயிலில் பிறந்த குழந்தைக்கு மமதா பானர்ஜி பெயர்: தாயும், சேயும் நலம்
கர்னால்: ஹரியானா மாநிலத்தில், ஓடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தைக்கு ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜியின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அந்த குழந்தை குருஷேத்ரா மற்றும் கர்னால் ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடிக் கொண்டிருந்த பரௌனி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த சனிக்கிழமை பிறந்தது. ரயிலில் உள்ள எஸ்-9 பெட்டியில் பயணம் செய்த பெண்களின் உதவியால் குழந்தை பிறந்தது.
இது குறித்து குழந்தையின் தாய் ஆர்த்தியுடன் பயனித்த அவரது மாமனார் தயானந்த் கூறியதாவது,
ஓடும் ரயிலில் பிறந்ததால் குழந்தைக்கு மமதா பானர்ஜி என்று பெயர் சூட்ட முடிவு செய்தோம். அவள் பிறப்பால் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இது ஆர்த்தியின் மூன்றாவது மகள் என்றார்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது,
சன்டிகாரில் இருந்து 110 கிமீ தொலைவில் இருக்கும் குருஷேத்ராவை கடந்து சென்று கொண்டிருக்கையில் ஆர்த்திக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அடுத்த ஸ்டேஷனான கர்னாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஒரு ஆம்புலன்ஸை தயார் நிலையில் வைத்திருந்தனர்.
ஆனால் குழந்தை ரயிலிலேயே பிறந்துவிட்டது. அதன் பிறகு தாயும், சேயும் கர்னால் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications