122 லைசென்ஸ்களையும் ரத்து செய்தால் என்ன? - அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழலே நடக்கவில்லை என்று சாதிக்க ஆரம்பித்துள்ளார் மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு கூடுதலாக பொறுப்பு வகிக்கும் கபில் சிபல்.
இன்னொரு பக்கம், அபராதமாக ஒரு தொகை பெற்றுக் கொண்டு, முறைதவறிய நிறுவனங்களை அனுமதிக்க ஆரம்பித்துள்ளது அரசு.
ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் இன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.
ஆ ராசா காலத்தில் நடந்த ஒட்டுமொத்த 2 ஜி அலைக்கற்றை ஏலத்தையுமே ரத்து செய்துவிட்டு, மீண்டும் புதிதாக ஏலம் விட வேண்டும். அரசுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் சரி செய்யப்பட வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆ ராசா காலத்தில் வழங்கப்பட்ட லைசென்ஸ்கள் உள்பட 122 லைசென்ஸ்களையும் ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு மத்திய அரசுக்கும் மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கும் இன்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சுப்பிரமணிய சாமி, "குறிப்பிட்ட சில நிறுவனங்களின் உரிமங்களை மட்டும் ஏன் கேன்சல் பண்ண வேண்டும்... ஒட்டுமொத்த ஒதுக்கீடுமே முறையற்றது என தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியே கூறியுள்ளார். இதில் குறை கண்டுபிடிக்க முயல்கிறார் அமைச்சர் கபில் சிபல். இது தவறு, ஊழலை மூடி மறைக்கும் முயற்சி. அதனால்தான் 122 லைசென்ஸ்களையுமே ரத்து செய்யச் சொல்கிறோம். இந்த வழக்கின் உண்மையான நோக்கம் சுப்ரீம் கோர்ட்டுக்குப் புரிந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது" என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பாஜகவும் வரவேற்றுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications