சிகிச்சை பெற வழியின்றி தவித்த நோயாளிக்கு உதவிய வைகோ
சென்னை: விபத்தில் காயமடைந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்யாததால், அரசு பொது மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்ததால் தவித்து வந்த உ.பியைச் சேர்ந்த தொழிலாளிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உதவிக் கரம் நீட்டி சிகிச்சைக்கு வழி செய்துள்ளார்.
சென்னை அரசு பொது மருத்துவமனை அருகே, காயம் அடைந்த ஒருவர் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பதாக வைகோவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வட சென்னை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஜீவனை அழைத்து, காயம் அடைந்தவர் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யும் படி வைகோ கூறினார்.
இதையடுத்து ஜீவன் விரைந்து சென்றஅந்த நபரைக் கண்டுபிடித்து மீட்டார். அவரது பெயர் முகமது ஷா. 40வயதான இவர் உ.பியைச் சேர்ந்தவர். காலில் பலத்த காயத்துடன் இருந்தார். வேலையில் சேருவதற்காக சென்னை வந்தபோது சாலை விபத்தில் சிக்கி காயமடைந்து விட்டார்.
அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றபோது போலீஸ் வழக்குப் பதிவு செய்யாத காரணத்தால் சிகிச்சை அளிக்க மருத்துவமனை மறுத்துள்ளது. இதனால் சிகிச்சை பெற வழியில்லாமல் தவித்துள்ளார்.
அவரை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று முதலில் முதலுதவி கொடுத்தனர். பின்னர் போக்குவரத்து காவல்துறையில் புகார் தரப்பட்டது. அவர்கள் விபத்து வழக்குப் பதிவு செய்தனர். அதன் பின்னர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் ஷா. அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது நலமடைந்து வருகிறார் ஷா.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications