29 காங். எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுடன் டெல்லியில் ஜெகன்மோகன் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணா நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக சமீபத்தில் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. அதில் கர்நாடகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு கூறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
இதை வலியுறுத்தி இன்று அவர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தனது ஆதரவாளர்கள் 1500 பேருடன் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
அவருடன் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகன் மோகனை ஆதரிக்கும் 27 எம்.எல்.ஏக்களும், 2 எம்.பிக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பின்னர் சமீபத்தில் ஹைதராபாத்தில் ஆந்திர மாநில காங்கிரஸைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார் ஜெகன் மோகன். இந்த நிலையில் அவர் முதல் முறையாகடெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications