2ஜி விவகாரம் குறித்து பாஜக பொய் பிரசாரம் செய்கிறது-அமைச்சர் நாராயணசாமி
சிதம்பரம்: 2ஜி விவகாரம் குறி்த்து பாஜக பொய் பிரசாரம் செய்து வருகிறது. அவர்கள் முயற்சி ஒருபோதும் மக்கள் மத்தியில் எடுபடாது என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
காங்கிரஸ் - திமுக கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணி தான் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியாத விரக்தியில் உள்ள பா.ஜ.க. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரிதுபடுத்தி பொய் பிரசாரம் செய்து வருகிறது. பாஜக -வின் இந்த முயற்சி மக்கள் மத்தியில் எடுபடாது. மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான தணிக்கைத்துறையின் அறிக்கை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. அது முற்றிலும் தவறானது.
விரைவில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை சுமூகமாக நடத்துவது குறித்து பாஜக தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருடன் பேசப்பட்டுள்ளது. எனவே, வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications