ஜெகன் கட்சியின் பெயர் ராஜண்ணா ராஜ்ஜியம் : கட்சி தலைவர் ஒய். வி. சுப்பா ரெட்டி

கிருஷ்ணா நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து ஜெகன் நேற்று டெல்லியில் தனது ஆதரவாளர்களுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருநதார். இதன் மூலம் அவரது பலத்தை அனைவருக்கும் தெரிவித்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். அவருக்கு ஆதரவாக 24 எம்.எல்.ஏ.க்களும், 2 எம்.பி.க்களும் உள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜெகன் ஆதரவாளர்களால் ஆந்திர அரசியலில் அதிர்ச்சி அலை வீசுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை ஜெகன் தனது கட்சிக்கு ராஜண்ணா ராஜ்ஜியம் என்று பெயர் வைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வந்தன. இந்த தகவல் சில பிரபல தெலுங்கு செய்தி சேனல்களில் மட்டும் வந்தது. இந்த புதிய கட்சி அடுத்த மாதம் துவங்கப்படும் என்று ஏற்கனவே அவர் அறிவித்திருக்கிறார்.
ஜெகனின் புதிய கட்சியின் தலைவராக ஒய். வி. சுப்பா ரெட்டி, துணை தலைவராக எஸ். ராமகிருஷ்ணா ரெட்டி, பொதுச் செயலாளராக சிவசங்கர் ரெட்டி, இணை செயலாளராக டி. விஸ்வநாத ரெட்டி, பொருளாளராக கே. ஸ்ரீனிவாஸ் நாயுடு ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
நேற்று ஜெகன் உண்ணாவிரதத்தால் ஜந்தர் மந்தர் பரபரப்பாக காணப்பட்டது. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்ததால் டெல்லி போலீசார் ஜெகனை கைது செய்ய வேண்டியதாகியது. ஆனால் சில நிமிடங்களிலேயே அவர் விடுவிக்கப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications