பிரேசில் நிலச்சரிவில் 260 பேர் பலி!

பிரேசில் நாட்டில் பொதுவாக இது மழைக்காலமில்லை. ஆனால் எப்போதுமில்லாத வகையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் ரியோடி ஜெனீரோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறு உடைந்து நகரப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. டெரசோபோலில் மற்றும் டெட்ரோபோலில் ஆகிய நகரங்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ளன. இங்கு பெரும் வெள்ளம் புகுந்தது. இதில் மலையின் சில பகுதிகள் குடியிருப்புகளின் மீது சரிந்து விழுந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 260 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.
இதனையடுத்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 800 பேர் கொண்ட மீட்பு படையினர் இதில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளை அதிபர் தில்மா ரூசப் பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். வெள்ள நிலைமை மோசமாக இருப்பதால் ரியோடி ஜெனீரோ பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications