சென்னை கடல்சார் பல்கலைக் கழகம், துணைவேந்தர் வீட்டில் சிபிஐ ரெய்டு!
சென்னை: நிதி முறைகேடு புகாரின் அடிப்படையில் சென்னை உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையை ஆரம்பித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விஜயன் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடக்கிறது.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னை நீலாங்கரை அருகே உள்ள உத்தண்டியில் 2008 முதல் செயல்பட்டு வருகிறது. கடல்சார் படிப்புக்கு தமிழகத்தில் உள்ள ஒரே பல்கலைக் கழகம் இதுதான்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் இந்த பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்ட வகுப்புகளில் 600 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு இட ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக வாகனசெலவினங்கள் , கட்டடம் எழுப்புதல் போன்றவற்றில் செலவுகள் மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் இன்று காலை பல்கலைக்கழகத்துக்கு வந்த சி.பி.ஐ.,யினர் ஆவணஙகள் நிலவரம் மற்றும் அலுவலர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்து கேள்விகள் எழுப்பினர்.
கொட்டிவாக்கத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் விஜயன் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் மேற்கொண்டனர்.
நேற்று (புதன்கிழமை) இந்த பல்கலைக்கழகத்தில் ஓராண்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பாராட்டும், பட்டமும் வழங்கும் விழா முடிந்து, துணைவேந்தர் டெல்லி சென்ற நிலையில் இந்த ரெய்ட் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பல்கலைக்கழகம் சென்னையில் அமைய கடுமையான போராட்டத்தை மத்திய அரசு கடந்த ஆட்சியின்போது சந்தித்தது. இப்பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை அப்போதைய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு லோக்சபாவில் தாக்கல் செய்ய முயன்றபோது திரினமூல் காங்கிரஸ் கட்சியினரும், மார்க்சிஸ்ட் கட்சியினரும், பாலுவைத் தாக்கி மசோதாவைப் பறிக்க முயன்றது நினைனவிருக்கலாம். அந்த பல்கலைக்கழகத்தில்தான் இப்போது ஊழல் புகார் கிளம்பி ரெய்டு நடந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications